நம்புங்கள்...நீங்கள் நம்பியே ஆகவேண்டும்!
📚 மொழி மற்றும் எழுத்து உண்மைகள்:
Queue – ஐந்தெழுத்துகள் இருந்தாலும், ஆங்கில மொழியில் இந்தச் சொல் மட்டுமே முதல் எழுத்துப் போல் உச்சரிக்கப்படும்.
ஆங்கில எழுத்துகளான a, b, c, d ஆகியன 1 முதல் 99 வரை ஆங்கில எழுத்தில் வரா. 100 என்பதை Hundred என ஆங்கிலத்தில் எழுதும் போதுதான், d என்னும் எழுத்து வரும்.
ஆங்கில எழுத்துகளான a, b, c, ஆகியன 1 முதல் 999 வரை ஆங்கில எழுத்தில் வரா. 1000 என்பதை Thousand என ஆங்கிலத்தில் எழுதும்போதுதான், a என்னும் எழுத்து வரும்.
ஆங்கில எழுத்துகளான b, c, ஆகியன 1 முதல் 999,999,999 வரை ஆங்கில எழுத்தில் வரா. 1,000,000,000 என்பதை Billion என ஆங்கிலத்தில் எழுதும் போதுதான், b என்னும் எழுத்து வரும்.
ஆங்கில எழுத்தான c என்பது, எந்த எண்ணை ஆங்கிலத்தில் எழுதினாலும் வராது.
ஆங்கிலத் தட்டச்சு இயந்திரத்தில், ஒரே கையால் இடப் பக்கம் தட்டச்சு செய்யக்கூடிய ஆக நீளமான வார்த்தை – Stewardesses.
ஆங்கிலத் தட்டச்சு இயந்திரத்தின் ஒரே வரிசையில் தட்டச்சு செய்யக்கூடிய ஆக நீளமான வார்த்தை – typewriter.
ஆங்கில மொழியில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் எழுத்து – E.
1939ஆம் ஆண்டில் Ernest Vincent Wright என்பார் எழுதிய புதினம்தான் Gadsby. (267 பக்கம், ஐம்பதாயிரம் சொற்கள். அவற்றுள், ஒன்றில் கூட e என்னும் ஆங்கில எழுத்து இடம்பெற்றாது.
1876ஆம் ஆண்டு மார்க் டுவேய்ன் என்பார் எழுதிய டாம் சாயர் (Tom Sawyer) என்னும் கதை நூல்தான் தட்டச்சு செய்யப்பட்ட முதல் ஆங்கில நூல்.
Uncopyrightable என்னும் 15 எழுத்துச் சொல் மட்டுமே, ஓர் எழுத்தை இரு முறை பயன்படுத்தாமல், எழுதக்கூடிய அதிக நீளமான வார்த்தை.
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில், அதிக பொருள் விளக்கமுடைய ஒரே சொல் – Set. அதில், 464 வெவ்வேறு பொருளுடைய சொற்கள் அதில் இருக்கின்றன.
ஆங்கில எழுத்துகளான 'i' , 'j' ஆகியவற்றின் மேலிடும் புள்ளி, டிட்டல் (tittle) எனக் குறிப்பிடப்படும்.
ஆங்கிலத்தில் dw எனத் தொடங்கும் எழுத்துகளில் மூன்று சொற்கள் மட்டுமே இருக்கின்றன. ஒன்று, dwarf. அடுத்தது dwell. மூன்றாம் சொல், dwindle.
🔢 கணித மற்றும் வரலாற்று உண்மைகள்:
உலகின் முதல் பல்கலைக்கழகம் கிமு 700 ஆம் ஆண்டில் டக்ஸீலா (Taxila) என்னுமிடத்தில் செயல்பட்டது.
111,111,111 x 111,111,111 = 12,345,678,987,654,321
⚔️ சண்டை மற்றும் விளையாட்டு உண்மைகள்:
உலகின் மிகு குறுகிய போர் இங்கிலாந்துக்கும் ஸான்ஸிபாருக்கும் இடையே நடைபெற்றது. மொத்த நேரமே, 38 நிமிடங்கள்தாம்!
கோல்ப் பந்தின் மேல் பரப்பளவில், 366 சிறு குழிகள் இருக்கின்றன.
குத்துச் சண்டை விளையாட்டில் மட்டுமே பார்வையாளர்களோ, பங்கேற்பவர்களளோ, போட்டி முடியும் வரை, புள்ளி எண்ணிக்கையையோ வெற்றியாளரையோ அறியார்.
🎴 சீட்டுக் கட்டு மற்றும் சிலை உண்மைகள்:
சீட்டுக் கட்டிலிருக்கும் 4 ராஜாக்களும் வரலாற்றுப் புகழ்மிக்கவர்களை குறிப்பன. Spade ராஜா – டேவிட் மன்னர், Clubs ராஜா – மாவீரன் அலேக்ஸாண்டர், Hearts – சார்ல்மேன் (Charlemagne), Diamonds – ஜூலியஸ் ஸீஸர்.
பூங்காவிலிருக்கும் குதிரைச் சிலையின் இரு கால்களும் வான் நோக்கி இருந்தால், சவாரி செய்பவர் போரில் மாண்டவர் எனப் பொருள்படும்.
குதிரைச் சிலையின் ஒரு கால் மட்டும் வானில் இருந்தால், சவாரி செய்தவர் போரின் விழுப் புண்ணால் மாண்டார் எனப் பொருள்படும்.
குதிரைச் சிலையின் நான்கு கால்களுமே தரையிலிருந்தால், சவாரி செய்தவர் இயற்கையான முறையில் மாண்டார் எனப் பொருள்படும்.