முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்
ர்

சான்றோர் பொன்மொழிகள்

📜 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

தொலைவில் வசிப்பதால், ஓருவர் கொள்ளும் உறவு மாளாது.
அருகில் வசிப்பதால், உறவு நிர்மாணம் ஆவதில்லை.
ஒருவர் கொள்ளும் பரிவும் பாசமுமே,
நம்பிக்கையை வலுப்படுத்தி உறவைப் பாதுகாக்கின்றது.

வேண்டியவை எல்லாம் கிடைக்கும்போது,
வாழ்க்கை மதிப்பற்றதாகின்றது.
ஆனால், ஏதோ ஒன்று குறையும்போதுதான்,
வாழ்க்கை எல்லாமே நிறைந்தது போலத் தோன்றுகின்றது.

ஒருவர் இல்லாதபோதுதான்
அவரின் முழுமையான மதிப்பு நமக்குப் புரிகின்றது.

ஒரு லட்சம் அழகிய முகங்களைக் காட்டிலும்
ஓர் அழகிய இதயமே அதி முக்கியமானது.

உங்கள் வாழ்க்கையை உங்களால் மட்டுமே மாற்ற முடியும்.
வேறு எவரும் உங்களுக்கு அதைச் செய்து தர முடியாது.

மகிழ்ச்சி உன்னிடம் வராது.
உனக்குள் இருந்துதான் அது வரும்.

☸️ புத்தர் பெருமான்

ஒரு பூவை நாம் விரும்பும்போது அதைப் பறிக்கின்றோம்.
அதையே நாம் நேசிக்கும்போது
அதற்கு அன்றாடம் நீருற்றுகின்றோம்.

மனிதர்களின் சோதனை மிகுந்த கண்டுபிடிப்பே பணம்தான்.
ஆனால் மனித குணத்தைச் சோதிக்க
அதுவே சிறந்த கருவி.

கோபத்தில் பதில் அளிக்காதீர்கள்.
மகிழ்ச்சியில் சத்தியம் செய்யாதீர்கள்.
சோகத்தில் முடிவெடுக்காதீர்கள்.

🕉️ சுவாமி விவேகானந்தர்

கனவுகளுக்குத் தூக்கம் தேவை.
குறிக்கோளுக்குத் தூக்கமற்ற முயற்சி தேவை.

மனம் ஒரு சிறந்த விளை நிலம்.
எதை விதைக்கிறோமோ
அதையே அறுவடை செய்கிறோம்.

வென்றால் நீ வழிநடத்தலாம்.
தோற்றால் நீ வழிகாட்டியாகலாம்.

✝️ அன்னை திரேசா

உதாரணம் கொடுப்பது எளிது.
ஆனால் உதாரணமாக இருப்பதுதான் கடினம்.

📜
🕉️