39 பொன் வாசகங்கள்
1.
கம்பளிப்பூச்சிக்கு கடைசிக் கட்டம் எதுவோ, அதுவே உலகிற்கு வண்ணத்துப்பூச்சி கிட்டும் நாளாகும்!
2.
சிறு பறவை நம்புவது, தன் சிறகுகளை!. தான் ஓய்யாரமாக அமர்ந்திருக்கும் கிளையை அல்ல..தன்னை நம்புவதால்தான் அதற்குப் பறக்கவும், இறங்கவும் உதவி தேவைப்படுவதில்லை.. தம்மையே நம்புவோருக்கு வெற்றி நிச்சயம்.
3.
மழையில் நனைந்த என்னை, எல்லாரும் மழையைத் திட்டியபோது, தலையை துவட்டிவிட்டு மழையைத் திட்டினார் என் அம்மா!
4.
உன் உடலை நன்றாகக் கவனித்துக்கொள். நீ உயிரோடு வாழக் கூடிய ஒரே இடம் அதுதான்!
5.
அடுத்தவருக்கு நீ கொடுக்கக் கூடிய ஒரே பரிசு, நேரம்தான்! உன் வாழ்க்கையில் திரும்பிக் கிடைக்காத ஒன்றைத்தான் ஒருவருக்கு நீ தருகிறாய்!
6.
மனிதக் கண்டுபிடிப்பில் ஆகக் கொடூரமான ஒன்றுதான் பணம்! ஆனால் மனித குணத்தைப் பரிசோதிக்க அதுவே மிகச் சிறந்த உரை கல்! -
7.
அடுத்தவருக்கு நல்லது நடக்க வேண்டி நீ நினைத்தால், அதுவே உனக்கும் கிடைக்கும். இதுவே இயற்கையின் தத்துவம்! -
8.
கோடி நேற்றுகளுக்கும், கோடி நாளைகளுக்கும் இடையே இருப்பது ஒரே ஒர் இன்றுதான்!
9.
சுக்குநூறாக நொருங்கிய நேற்றுடன், உங்கள் நாளைத் தொடங்காதீர்கள். அன்றாடம், நாம் எழுந்திருப்பது, நாம் இனி வாழவிருக்கும் நாட்களின் முதல் நாளுடனேயே.
10.
பிரச்னைகளைக் கவனித்தால் நமக்குக் கூடப் பிரச்னைகள் தாம் வரும். அவற்றைக் களைவதில் குறியாக இருந்தால், நமக்குக் கூடுதலாக வாய்ப்புகள் கிட்டும்.
11.
இதயம் மிகச் சிறந்த விளை நிலம். நாம் விதைக்கும் எதுவும் – அன்பு, வெறுப்பு, பயம், நம்பிக்கை, பழு, பொறாமை – எதுவும் வளர்ந்து மகசூல் தரும். எவற்றை நாம் அறுவடை செய்வது என்பதை நாம்தான் முடிவு செய்யவேண்டும்! -
12.
ஒருநாள் பணத்தைக் கண்டேன். நீ வெறும் தாள் என்றேன். அது சிரித்தது. நான் வெறும் தாள்தான். ஆனால் இதுவரை எந்த குப்பைத் தொட்டியையும் கண்டதில்லை. அதுவே என் வாழ்க்கை என்றது. -
13.
ஒரு துளி மழைநீர் குளத்தில் விழுந்தால், அடையாளம் கிடைக்காது. ஆனால் இலை மேல் விழும் மழைத்துளி மின்னும் தன்மை பெறுகின்றது. உங்கள் திறமை பரிமளிக்கும், உரிய இடத்தைக் கண்டுபிடித்து ஒளிருங்கள். நாம் அணியும் காலணியால் நம் வாழ்க்கைப் பயணம் அமைவதில்லை, நாம் எடுத்து வைக்கும் அடிகளே அவற்றைத் தீர்மானிக்கின்றன.
14.
வாழ்க்கை என்பது, அடுத்தவரைப் பார்த்தெழுதித் தேர்ச்சி பெற இயலாத மிகச் சிரமமான தேர்வுத்தாள்! ஏராளமானோர் அதில் தேர்ச்சி பெறுவதில்லை. காரணம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தேர்வுத்தாள்தான் கிடைக்கும்!
15.
காத்திருந்தால், நேரம் நொண்டி அடிக்கும். நாம் தாமதம் செய்தால், அது பறக்கும். நாம் சோகமாக இருந்தால் அது நம்மை வாட்டும். மகிழ்ச்சியாக இருந்தால் அது கொஞ்ச நேரமே நீடிக்கும். வருந்தினால் அது வளர்ந்துகொண்டே போகும். எனவே, மனிதரின் மனநிலையைப் பொறுத்தே, நேரம் அமைகின்றது. கடிகாரங்கள் அவற்றைத் தீர்மானிப்பதில்லை!
16.
குறிக்கோளுக்காக வாழ்பவர்கள், வானுயர மரம் போல நிற்க வேண்டும். வீழ்ந்தால், மீண்டும் முளைத்தெழும் விதை போல விழ வேண்டும்.
17.
ஒவ்வொரு காலை விடியலும், மறுபிறப்புக்கு ஒப்பானதாகும். நேற்றைய நடப்பினைக் கெட்ட கனவாக மறந்து, இன்று நடப்பனவற்றை மிகச் சிறந்தவையாக நினையுங்கள்.
18.
பறவை, தன் காலையும் சிறகையுமே நம்பியருக்கின்றது.. அது அமர்ந்திருக்கும் மரக் கிளையை நம்பி அல்ல! உன்னையே நம்பு. வெற்றி நிச்சியம் கிட்டும்..
19.
உங்களிடம் எந்த நற்குணமும் தென்படவில்லை எனப் பலர் கூறுவார்கள். அப்படி அவர்கள் தவறாகக் கூறினால், நீங்கள் மனத்திற்குள் நினைத்துக் கொள்ளவேண்டியது ஒன்றுதான். "கண்பார்வையற்றவர்களுக்கு வாழ்க்கை சிரமமானதுதான்". -
20.
இலக்குகளும் கனவுகளும் உடையவர்கள் வெற்றி பெற ஒரே காரணம், தாங்கள் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்ததே.
21.
இந்த உலகின் எந்தப் பொருளும் சொத்தும் உங்களுக்கு உரிமையில்லை என்பதை உணருங்கள். எல்லாமே தற்காலிகமானதுதான். உங்கள் மனதில் குடியிருக்கும் அன்பு ஒன்று மட்டுமே என்றும் உண்மையானது, நிரந்தரமானது!
22.
கோபம், மகிழ்ச்சி, சோகம் மூன்றும் மனிதர்களுக்கு இயல்பானவை. கோபத்தில் பதில் அளிக்காதீர்கள். மகிழ்ச்சியில் சத்தியம் செய்யாதீர்கள். சோகத்தில் முடிவெடுக்காதீர்கள். –
23.
தவறானவர்களிடம் நல்லவராக இருப்பதற்கு வருந்தாதீர்கள். உங்கள் குணம் உங்களைப் பற்றி நிறைவாகவே சொல்லும். அவர்கள் குணம் அவர்களைப் பற்றி போதிய மட்டும் சொல்லும். –
24.
உங்கள் இலக்கையும் கணயையும் எய்த வேண்டுமேன்றால், கட்டொழுங்கு இல்லாமல் அது நிறைவேறாது! -
25.
உங்களின் கைகளில் இருக்கும் ரேகையை வைத்து மட்டும் உங்கள் எதிர்காலத்தைக் கணிக்காதீர்கள். காரணம் கைகளே இல்லாதவர்களுக்குக் கூட எதிர்காலம் உண்டு! -
26.
தவறு என்றால் அது தவறுதான், எல்லாரும் அதைச் செய்து கொண்டிருந்தால் கூட! சரியென்றால் அது சரிதான், யாரும் அதைச் செய்யாமல் இருந்தால் கூட! -
27.
பிறருக்காக நீங்கள் பிரார்த்னை செய்பவராக நீங்கள் இருந்தால், உங்களுக்காக நீங்கள் பிராத்தனை செய்தகொள்ள வேண்டிய தேவையையே ஆண்டவன் வைப்பதில்லை!
28.
நட்பு என்பது யாருக்கு உங்களை நீண்ட நாட்களாகத் தெரியும் என்பதைப் பொறுத்ததல்ல. யார் உங்கள் வாழ்க்கையில் வந்து எந்நேரமும் உங்களை விட்டகலாது இருக்கிறார்களோ, அவர்களே ஆத்ம நண்பர்களாகின்றனர்.
29.
அன்பாக இருப்பதற்கும் உத்தமமாக இருப்பதற்கும் இடையே ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், அன்பாக இருங்கள். எப்போதுமே நீங்களே உத்தமமானவர் ஆவீர்.
30.
நம்பிக்கை என்பது ஒட்டு வில்லை போன்றது. வில்லையை ஒருமுறை ஒட்டி அகற்றினால், முதல் முறை போல அது மீண்டும் வலுவாக ஒட்டாது.
31.
ஒப்பாரும் மிக்காறுமற்ற அந்த உசிதமான நொடிக்காகக் காத்திருக்க வேண்டாம். உங்களுக்குக் கிடைப்பதே அவ்வாறான நொடி என, அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
32.
நீரிடமிருந்து நீர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எந்தச் சூழ்நிலையிலும் தகுந்தபடி நடந்துகொள்வும். முக்கியமாக, நீர் உம் வழியே மிதந்து செல்லவும் வழி காணவேண்டும். -
33.
பணம் என்பது சிறு காசு, உடல்நலம் என்பது பெரிய காசு, அன்பு என்பது ராசிக் காசு, நட்பு என்பது இனிய காசு, ஆனால் உறவு என்பது பொற்காசு! அதை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள். -
34.
தோல்வி என்னும் கொடிய தொற்றுநோயை அழிக்கவல்ல சிறந்த மருத்துவம், நன்னம்பிக்கையும் கடுமையான உழைப்புமே! -
35.
அருகிலிருந்து உனக்குத் தோள்கொடுக்க யாருமிலரே என ஏமாற்றமடையாதே! அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. யாருமின்றி என்னால் செயல்பட முடியும் என போதித்தவர்களே, என்னை விட்டுத் தூர ஓடியவர்களே! -
36.
வீட்டை விட கதவு சிறிது. கதவை விட பூட்டு சிறிது. அதனினும் சிறிது, பூட்டைத் திறக்கவல்ல சாவி. ஆனால், அந்தச் சிறு சாவிதான் அவ்வளவு பெரிய வீட்டைத் திறக்கவல்லது. சிறு உபயங்களும் உத்திகளும் பெரிய குழப்பங்களைத் தீர்க்கவல்லன. -
37.
யாருக்கும் விளக்கமளிக்கும் கடமை உனக்கில்லை. உன்னை நேசிக்கின்றவனுக்கு அத தேவையில்லை. உன்னை நேசிக்காதவன் அதை நம்புவதில்லை. -
38.
அன்பு, நேர்மை, உண்மை, மதிப்பு என்னும் நான்கும் இன்றி மனித வாழ்வுக்குப் பொருளில்லை! -
39.
ஒவ்வொரு மண் தூளும், தான் மட்டுமே மலையாவதில்லை என்றால், நிலமே இராது. ஒவ்வொரு துளி நீரும் தான் சமுத்திரம் ஆவதில்லை என்றால் கடலே இராது. ஒவ்வொரு சுரமும் தான் பல்லிசை ஆவதில்லை என்றால், சுக ராகமே இராது. ஒவ்வொரு சொல்லும் தான் நூலகம் ஆக இயலாது என்றால், நூலே இருக்காது. ஒவ்வொரு செங்கலும் தான் சுவராக இயலாது என்றால், வீடே இராது. ஒவ்வொரு நெல்மணியும் தான் வயலாவதில்லை என்றால், அறுவடையே இராது. நம்மில் ஒவ்வொருவரும், ஒருவரால் மட்டுமே எந்த மாறுதலும் நேராது என்றால், நாம் வாழும் இந்தப் பூமியில் அமைதியும் இராது, உலகில் அன்பும் நிலவாது.