முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

பேரறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா பேசிய சிந்தனைக்குரிய வரிகள் :

போட்டியும்,பொறாமையும்,பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நம் பாதையில் நாம் நேராக நடந்து செல்லத் துணையாக இருப்பது, கல்வி மட்டுமே.
வன்முறை என்பது இருபக்கமும் அழிக்கக்கூடிய கூரிய ஆயுதம்.

தன்னை வென்றவன் தரணியை வென்றவன்.

எதிரிகள் தாக்கித் தாக்கித் தங்கள் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

சட்டம் ஓர் இருட்டறை. அதில் வதுக்குரைஞரின் வாதம் விளக்கு. அந்த விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை.

அழகு ஓர் ஆபத்தான ஆயுதம்.அதனால் ஆளப்படுவோர் ஆண்கள். ஆள்வோர் பெண்கள்.

அஞ்சாநெஞ்சம் படைத்த இலட்சியவாதிகளே, நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வம்.

விதியை நம்பி மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகவும் கேடு.

மோரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதைப் போல அறிவை வளர்த்துக்கொண்டு, பயன்பெற வேண்டும்.

கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.

அறிவாலும் ஆற்றலாலும் ஆகாத காரியம் என்று ஒன்றும் இல்லை அறிவோடும் ஆற்றலோடும் உழைத்தால் வெற்றி நிச்சயம்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.