முக்கிய பக்கங்கள்
நிர்வாகம்

சொல்லினும் நற்சொல்

சொல் – நற்சொல்

அங்குலம் – விரற்கிடை
அசரீரி – விண்ணொலி
அஞ்சலி – இறுதி வணக்கம்
அஞ்சனம் – கண் மை
அட்சதை – மங்கல அரிசி
அட்சரம் – எழுத்து
அதிகாரி – ஆட்சி ஆணையர்
அதிகாரம் – ஆட்சி ஆணையர்
அன்னியன் – அயலான்
அனுபவம் – பட்டறவு
அனுக்கிரகம் – அருளுடைமை
அஜீரணம் – செயறியாமை
அஸ்தி – எரியுடல் சாம்பல்
அஸ்திரம் – அம்பு, கணை
அதிகாரம் – முறையாண்மை
அதிகப் பிரசங்கம் – அடங்காப் பேச்சு
அதிதி – விருந்தினர்
அதீதம் – எல்லையற்ற
அந்திரம் – மறைபொருள்
அபயம் – தஞ்சம்
அபிஷேகம் – முழுக்காட்டல், முழுக்காடு, முழுக்கு
அமங்கலி – கைம்பெண்
அமரர் – விண்ணவர்
அமாவாசை – மதி மறை நாள்
அமிர்தம் – அமிழ்தம், அமுதம்
அர்ச்சனை – மலர்தூவி வழிபாடு, பூசனை
அரவம் – ஒலி, ஓசை, பாம்பு
அலங்காரம் – ஒப்பனை, புனைவு
அவத்தம் – கேடு