Accident – நேர்ச்சி
Acknowledgement Card – ஒப்புகை அட்டை
Admission – சேர்க்கை
Agency – முகவாண்மை
Agent – முகவர்
Allergy – ஒவ்வாமை
Assurance – காப்பீடு
Attendance Register – வருகைப் பதிவேடு
Attestation – சான்றொப்பம்
Automobile – தானியங்கி
Bench – விசிப்பலகை
Binding – கட்டமைப்பு
Bona fide certificate – ஆளறி சான்றிதழ்
Central Government – நடுவண் அரசு
Chalk piece – சுண்ணக்கட்டி
Champion – வாகை சூடி
Company – குழுமம்
Compounder – மருந்தாளுநர்
Deposit – இட்டு வைப்பு
Document – ஆவணம்
E-Mail – மின்னஞ்சல்
Ever silver – நிலைவெள்ளி
Fax – தொலை நகலி
Fiction – புனைக்கதை
Insurance – ஈட்டுறுதி
Interview – நேர்காணல்
Irregular – ஒழுங்கற்ற
Key – திறவுகோல்
Keyboard – விசைப்பலகை
Laptop – மடிக்கணினி
License – உரிமம்
Lift – மின்தூக்கி
Lorry – சரக்குந்து
Mammal – பாலூட்டி
Missile – ஏவுகணை
Mortuary – பிணக்கிடங்கு
Passport – கடவுச்சீட்டு
Password – கடவுச் சொல்
Permanent – நிரந்தரம்
Photo Graph – நிழற்படம்
Photocopy (Xerox) – ஒளிப்படி
Planet – கோள்
Plastic – நெகிழி
Print out – அச்சுப் படி
Probationary Period – தகுதிகாண் பருவம்
Proposal – கருத்துரு
Receiver – அலை வாங்கி
Remote Sensing – தொலை உணர்தல்
Research Centre – ஆராய்ச்சி நிலையம்
Search Engine – தேடுபொறி
Tea Stall – தேனீர் அங்காடி
Technical – தொழில்நுட்பம்
Tele Print – தொலை அச்சு
Telex – தொலை வரி
Temporary – தற்காலிகம்
Traitor – துரோகி
Ultra Sound Scanning – மீயொலி வரிக் கண்ணோட்டம்
Visa – நுழைவு இசைவு
Visiting Card – காண்புச்சீட்டு
(i) பேதை (Pethai)
Girl between the ages of 5 to 8
மகளிர்பருவம் ஏழனுள் 5 முதல் 8 வயதுவரையுள்ள பெண்
(ii) பெதும்பை (Pethumpai)
Girl between the ages of 9 and 10
9 முதல் 10 வயதுவரையுள்ள பெண்
(iii) மங்கை (Mangai)
Girl between 11 and 14 years
11 முதல் 14 வயது வரை உள்ள பெண்
(iv) மடந்தை (Madanthai)
Woman between the ages of 15 and 18
மகளிர்பருவம் ஏழனுள் 15 முதல் 18 வயதுவரையுள்ள பருவத்துப் பெண்
(v) அரிவை (Arivai)
Woman between the age of 19 and 24
19 வயதுமுதல் 24 வயதிற்குட்பட்ட பெண்
(vi) தெரிவை (Therivai)
Woman between 25 and 29 years of age
25 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்
(vii) பேரிளம்பெண் (Perilampenn)
Woman between the ages of 30 and 36
எழுவகைப் பருவமகளிருள் 30 வயதுக்கு மேல் 36 வயதுவரையுள்ள பெண்
தமிழ் இலக்கிய மேற்கோள்
‘அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப்
பாற்படு மகளிர் பருவக் காதல்
நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’
– பன். பாட். 220
‘பேதைக்கு யாண்டே ஐந்துமுதல் எட்டே.’ – 221
‘பெதும்பைக்கு யாண்டே ஒன்பதும் பத்தும்.’ – 222
‘மங்கைக்கு யாண்டே பதினொன்று முதலாத்
திரண்ட பதினா லளவும் சாற்றும்.’ – 223
‘மடந்தைக்கு யாண்டே பதினைந்து முதலாத்
திடம்படும் ஒன்பதிற் றிரட்டி செப்பும்.’ – 224
‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ – 225
‘தெரிவைக்கு யாண்டே இருபத் தொன்பது.’ – 226
‘ஈரைந்து இருநான்கு இரட்டி கொண்டது (36)
பேரிளம் பெண்டுக்கு இயல்புஎன மொழிப.’ – 227
ஆண்களின் பருவம்
பாலன் – 1 வயது முதல் 7 வயதிற்குட்பட்ட ஆண் (Balan, 1–7 years)
மீளி – 8 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட ஆண் (Meeli, 8–10 years)
மறவோன் – 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண் (Maravon, 11–14 years)
திறவோன் – 15 வயது (Thiravon, 15 years)
விடலை – 16 வயது (Vidalai, 16 years)
காளை – 17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண் (Kalai, 17–30 years)
முதுமகன் – 30 வயதுக்கு மேற்பட்ட ஆண் (Mudhumagan, after 30 years)