கவிநயம்

6/26/20251 min read

கவிதை என்பது கலைவடிவம். கவிதை வடிக்க கற்பனை வளம் வேண்டும், நீரோடையென ஓடும் சொல் நயம் வேண்டும். கேட்போர் கேட்டவுடன் சிந்தையைப் பற்றிக்கொள்ளும் மனங்கவரும் தன்மையும் வேண்டும்.

கவிதை என்பது தங்கச் சுரங்கம் போன்றது. அதில் தோண்டத் தோண்ட எண்ணற்ற எண்ணங்களும் கருத்துகளும் வெளிப்படும். அந்தச் சிந்தனை அரங்கத்திலிருந்து வெளிப்படும் கூனைடய ஒட்டகம், பாலைவனப் படகாகும். அருவியோ நெஞ்சுயர்த்தி நேராகப் பொழியும் நதிபோலத் தோன்றும். செடிகளை ஆட்கொள்ளும் நட்டுவாங்கமாக கா​ற்று உருமாறும். கண்ணில் மின்னும் மின்னல் ஓளியோ, வான் பொய்கையில் தாவும் கெண்டை மீனாகும்!

இந்தக் கவிதையை எழுதியவன், அதனைச் செதுக்கிய கவிஞன். அவன் கவிதைக்குள்ளும் (அந்தச் சொல்லுக்குள்) கவி இருக்கின்றான்.

கவிதையின் உட்பொருள் விதையாக இருக்கும் பொழுது, அது அந்தக்‘விதை’க்குள்ளும் இராதா என்ன?

கவிதையின் ‘வி’ என்னும் மேலாடையை விலக்கிப் பார்த்தால், அதனுள் இருக்கும் ‘கதை’ என்னும் கற்பனை தென்படும். ​

அதை மேலும் உரித்துப் பார்த்தால், வாழ்க்கையில் கிழிந்த இதயங்களைப் பிணைக்கும் ‘தை’ என்னும் செய்கை, வெள்ளி போல் முளைப்பது தெரியும்!