அகர ழகர சிகரம்

தமிழ் இலக்கணம்

அடிப்படைத் தமிழ் இலக்கணம்

நாம் அனைவரும் கற்றுணர்ந்த ஆற்றலாக, அடிப்படைத் தமிழ் இலக்கணம் இருக்கவேண்டும்.

தமிழ் அரிச்சுவடி என்பது, தமிழ் எழுத்துக்களின் வரிசையே. இதைத் தமிழ் அகரவரிசை எனவும் தமிழ் நெடுங்கணக்கு எனவும் குறிப்பிடுவோம்.

தமிழில் 12 உயிரெழுத்துகள், 18 மெய்யெழுத்துகள், 216 உயிர்மெய் எழுத்துகளுடன் ஓர் ஆய்த எழுத்தும் உண்டு. மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள்.

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ,ஓ, ஒள அகியன உயிர் எழுத்துகள்.

க் ங் ச ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் – ஆகியன

மெய்யெழுத்துக்கள்.

உயிரெழுத்து, மெய்யெழுத்துடன் சேரும்போது உயிர்மெய் எழுத்து உருவாகின்றது.

தமிழ் நெடுங்கணக்கில் சேரா கிரந்த எழுத்துக்கள் ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்​, க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துக்களை இன்று பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.

உயிர் மெய்யெழுத்துக்களில் மூன்று வகையான ஓசை வடிவங்கள் கிடைக்கப் பெறுகின்றன. முறையே அவை, வல்லினம், மெல்லினம் இடையினம் ஆகும்.

க, ச, ட, த, ப, ற என்பன வல்லினம்.

ய, ர, ல, வ, ழ, ள என்பன இடையினம்.

ஞ, ங, ந, ண, ம, ன என்பன மெல்லினம்.

குறில் எழுத்துக்கள்

12 உயிரெழுத்துகளும் ஒரு மாத்திரை அளவு மட்டுமே. அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும், 18 மெய்யெழுத்துகளுடன் புணர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகள், குறில் அல்லது குற்றெழுத்து எனப்படும்.

நெடில் எழுத்துக்கள்

இரண்டு மாத்திரை அளவு கொண்ட ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழும், 18 மெய்யெழுத்துடன் புணர்ந்து, உருவாகும் உயிர்மெய் நெடில் எழுத்து அல்லது நெட்டெழுத்து எனப்படும்.

உயிர்மெய் எழுத்து

மெய் எழுத்துடன், உயிர் எழுத்து சேர்ந்து, உயிர்மெய் எழுத்து ஆகும்.

மூன்று புள்ளி வடிவமாக இருப்பது – ஃ ​– ஆய்த எழுத்து என அறியப்படும்-