அகர ழகர சிகரம்
இவன் சிங்கப்பூரில் பிறந்தவன். தமிழ்நாட்டுத் தாய்வீட்டில் சில ஆண்டு வளர்ந்தான். அங்கு, திண்ணைப் பள்ளியில் பயின்றான்,
ஈராண்டு கழித்துத் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து பயில, மீண்டும் சிங்கப்பூர் திரும்பினான். அப்போதே, சிங்கப்பூரில், இரு மொழிக் கல்விக் கொள்கைதான்.
அந்தப் பிஞ்சு வயதில், தமிழ்மொழி கற்க மாணவர்கள் தடுமாறியபோது, இவனுக்கு மட்டும் தமிழ்மொழி பேசுவதும், கற்பதும் தடங்கலின்றி வந்தது. அதற்குக் காரணம், திண்ணைப் பள்ளியன்றி, வேறொன்றில்லை.
திண்ணைப் பள்ளி முன்னுரை
விரியவிருக்கும் மொட்டுகளை, வருங்கால, மணங்கமழும் மலர்களாக வளர்க்கும் பணியை ஏற்றது, திண்ணைப் பள்ளிப் பூங்காக்களே! பின்னாளில் உலகறிந்த மேதையானவர்கள் பலர், திண்ணைப் பள்ளி மாணவர்கள் என்பது, அனைவரும் அறிந்த உண்மை!
1880களிலிருந்து இந்தியாவில், திண்ணைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர், தமிழறிந்த மேலோர் ரா.பி. சேதுப்பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன் எனப் பலரும் பயின்று, பின்னர் அளப்பரியத் தொண்டாற்றி, பள்ளிக்குப் பெயர் பெற்றுத் தந்தனர்.
அவர்கள் போலன்றி, இவன் திண்ணைப் பள்ளியால், வாழ்நாள் முழுதும் தமிழ்மொழி நேசிக்கும் பயன்பெற்றான்; அதனால், முறையான தூய தமிழ்மொழியைப் பிசகின்றிப் பயன்படுத்தி, பிறருக்கும் தொண்டாற்றும் உறுதி பூண்டான்.
எளிமை, தூய்மை, கலப்படமின்மை ஆகியவையே, இவன் தமிழ்மொழியில் கடைப்பிடிக்கும் நேர்மை என்பதை மறுவுறுதிப்படுத்த விழைகிறான்.
அன்பே சிவம்!,
என்.எஸ்.நாராயணன்
(பின்குறிப்பு: உலகறிந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசனே, தம்மை ‘இவன்’ எனக் குறிப்பிட்டு எழுதினார். அவரே எம்மாத்திரம் என்பதால்தான், இவனும் தம்மை ‘இவன்’ என்றே குறிப்பிடுகிறான்! தன்னையும், வானினும் உயர்வான அவருடன் ஒப்பிட அல்ல!)
தொடர்பு கொள்ளுங்கள்
எங்கள் தமிழ் இலக்கிய இணையதளத்துடன் தொடர்பு கொள்ளவும். உங்கள் கருத்துகள் மற்றும் கேள்விகள் எங்களுக்கு முக்கியம்.
தொடர்பு:
மின்னஞ்சல்
manthranoviss@gmail.com
அறிமுகம்
தமிழ் இலக்கியம் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
மின்னஞ்சல்:
தொடர்பு
manthranoviss@gmail.com
© 2024. All rights reserved.
Developed by AptechITServices