அகர ழகர சிகரம்

பொருளறிந்து சொல்க

பொருளறிந்து சொல்க

மெய் போலத் தோன்றும் ​எழுத்தும் பொருளும்

1. அத்துடன் = அதனுடன்

2. அவைகள் = அவை

3. சுவற்றில் = சுவரில்

4. அருகாமை = அருகில்

5. நாற்றம் = துர்நாற்றம்

6. போக்குவரத்து = போக்குவரவு

7. ஒன்றாம் தேதி = முதல் தேதி

8. எட்டுப் பேர் = எண்மர்

9. நான்கே முக்கால் = நாலே முக்கால்

10. மருத்துவமனையில் அனுமதித்தல் = மருத்துவமனையில் சேர்த்தல்

11. தோற்கடித்து (தோல் + கடித்து) = தோல்வியுறச் செய்து

12. முற்றிலும் = முற்றும்

13. பகுதி மேகமூட்டமாக = ஓரளவு மேக​மூட்டமாக

14. நீரழிவு = நீரிழிவு

15. குடை மிளகாய் = குட மிளகாய்

16. மருதாணி = மருதோன்றி

17. ஏழரை நாட்டுச் சனி = ஏழரையாட்டைச் சனி

18. கட்டிடம் = கட்டடம்

19. ​தொப்புள் = கொப்பூழ்

20. முகர்ந்து = மோந்து

21. புடவை = புடைவை

22. பல்லாங்குழி = பன்னாங்குழி

23. வாய்வு = வளி, வாயு

24. சிகப்பு = சிவப்பு

25. வண்ணான் = வண்ணன்

26. ...என ​அழைக்கப்படுவார் = ..எனக் குறிப்பிடப்படுவார்

27. தட்டிச் செல்பவர் = வெல்பவர்

28. பணம்/உயி​ரிழக்கும் வாய்ப்பு = பணம்/உயி​ரிழக்கும் அபாயம்

29. பிரத்தியோகமாக = பிரத்தியேகமாக

30. தொடக்கி = தொடங்கி

31. மருந்து எடுத்தேன் = மருந்து குடித்தேன்/உட்கொண்டேன்

32. ஒருத்தன் = ஒருவன்

33. ஒருவள் = ஒருத்தி

34. கர்வம் கொண்டவள் அல்ல = கர்வம் கொண்டவள் அல்லள்

35. பண்ணியது = ஏற்படுத்திற்று

36. செல்வந்தர் = செல்வர்

37. நீர்வீழ்ச்சி = அருவி

38. அமுல் = அமல்

39. அதைப் பற்றியது = அதைப் பற்றி

40. தொற்றியது = தொற்றிற்று

41. முற்றியது = முற்றிற்று

42. கோர்வை = கோவை

43. கோர்த்து = கோத்து

44. கெட்டி மேளம் = கொட்டு மேளம்

45. பெருவாரியாக​க் காணப்படும் = பெருவராகக் காணப்படும்

46. பலருக்கும் (இன்று) = பலர்க்கும் (முன்னாளில்)

47. பதிநைந்தாயிரம் = பதினையாயிரம்

48. தென்மேற்கு சமூக மன்றம் = ​தெற்கு-மேற்கு சமூக மன்றம்

49. பேருந்து எடுத்தேன் = பேருந்தில் பயணம் செய்தேன்

50. பி​.சு​சீலா குரல் வழி கேட்கலாம் = பி.சுசீலா பாடக் கேட்கலாம்

51. குரலுக்குச் சொந்தக்காரர் = பாடலைப் பாடியவர்

52. தொள்ளாயிரத்தி = தொள்ளாயிரத்து

53. சதை = தசை

54. ஏமாந்தான் = ஏமாறினான்

55. தேனீர் (தேன் +நீர்) = தேநீர் (தேயிலை வடி நீர்)

56. முயற்சிக்கிறேன் = முயல்கிறேன்

57. சிறைக்குப் போனேன் = சிறைச்சாலை போனேன்

58. முன்னூறு (முதல் ​நூறு) = முந்நூறு (மூன்று ​நூறு)

59. ஒத்துக்கொள் = ஒப்புக்கொள்

60. குற்றச்சாட்டு = குற்றற்சாற்று

61. மீட்டி வந்தனர் = மீட்டு வந்தனர்

62. வென்னீர் = வெந்நீர்

63. உடுத்தி வந்தான் = உடுத்து வந்தாள்

64. திருநிறைச்செல்வன்/செல்வி = திருநிறைசெல்வன்/செல்வி

65. திருவளர்ச்செல்வன்/செல்வி = திருவளர்செல்வன்/செல்வி

66. தொட்டாச் சிணுங்கி = தொட்டாற் சுருங்கி

67. கற்​பூரம் = கர்ப்​பூரம்

68. அச்சுக் கோர்ப்பு = அச்சுக் கோப்பு

69. அழுகாதீர்கள் = அழாதீர்கள்

70. கடன் வழங்கினான் = கடன் கொடுத்தான்

71. தண்டனை வழங்கினான் = தண்டனை விதித்தான்

72. ஆவாரம் பூ = ஆவிரம்பு

73. கைமாறு = கைம்மாறு

74. பதட்டம் = பதற்றம்

75. தென்னங்கன்று = தென்னம்பிள்ளை

76. வேப்பம்பிள்ளை = வேப்பங்கன்று

77. சீயக்காய் = சிகைக்காய்

78. புட்டு உண்டான் = பிட்டு உண்டான்

79. நெல் குத்துதல் = நெல் குற்றல்

80. பச்சைப் பயிறு = பச்சைப் பயறு

81. குண்டுச் சட்டி = குண்டாச்சட்டி

82. ஆத்திச்சுடி = ஆத்தி சூடி

83. பழமுதிர்ச்சோலை = பழமுதிர் சோலை

84. நினைவு கூறுதல் = நினைவு கூர்தல்

85. நிறைய நூற்கள் = நிறைய நூல்கள்

86. நாட்கள் = நாள்கள்

87. எண்ணிக்கை உயர்ந்துவிட்டன = எண்ணிக்கை கூடிவிட்டது

88. மென்மேலும் = மேன்மேலும்

89. முயற்சித்தேன் = முயன்றேன்

90. இன்றி = அன்றி

91. அருவெறுப்பு = அருவரப்பு

92. எந்தன் = என்றன்

93. ஒருக்கால் (ஒரு வேளை) = ஒருகால்

94. ஒத்தி = ஒற்றி

95. மடப்பள்ளி = மடைப்பள்ளி

96. முயற்ச்சித்தேன் = முயன்றேன்

97. நூலை வரவழைத்த = நூலைத் தருவித்த

98. சுவற்றை = சுவரை

99. சுப்ரமணியன் = சுப்பிரமணியன்

100. பொருத்தவரை = பொறுத்தவரை

101. அமாவாசை = தேய்மதி, குறைமதி, மறைமதி

102. பெளர்ணமி = முழுமதி, நிறைமதி, வளர்மதி

103. என்றழைக்கப்டும் = எனக் குறிப்பிடப்படும்

104. ஜலகரங்கம் = நீர்க்கிண்ண இசை

105. தர்ம சங்கடம் = அடிவழி இடர்

106. பூதக் கண்ணாடி = உருபெருக்கிக் கண்ணாடி

107. ஜமீன் = நிலபுலம்

108. மாலு​மி = நாவாயோட்டி

109. அபாண்டம் = வீண் பழிக்கூற்று

110. சாவி = திறவுகோல்

111. சப்பாத்தி = கோந்தடை (கோந்து அடை)

112. புரோட்டா = புரியடை

113. பாயசம் = பாற்கன்னல்

114. பந்தயம் = பணயம்

115. பலத்த காயம் = பெரும் புண்

116. மெய்மை = மெய்ம்மை

117. பொய்மை = பொய்ம்மை

118. அருகாமை = அருகண்மை, அருகில்

119. நாக​ரீகம் = நாகரிகம்

120. பழநி = பழனி (பழைய பெயர் பொதினி)

121. மாயவரம் = மாயூரம்

122. மாகபலிபுரம் = மாமல்லபுரம்

123. எந்தன் = என்றன் (ஒருமை) எந்தம் (பன்மை)

124. உந்தன் = உன்றன் (ஒருமை) உந்தம் (பன்மை)

125. அல்ல = அது அன்று, அவை, அவன் அல்லன், அவள் அல்லள், அது அன்று, அவை அல்ல

126. ஐநூறு = ஐந்​நூறு

127. பழமை = பழைமை

128. உடமை = உடைமை

129. அடமானம் = அடைமானம்

130. மடப்பள்ளி = மடைப்பள்ளி

131. பேட்டை = புறநகர்

132. பாக்கி = நிலுவை

133. கொசு = கொசுகு (பழஞ்சொல்), சுள்ளான் இலங்கையில் நுளம்பு

134. தண்டஞ்சோறு = அரசரின் உண்டகாட்டிகள்

135. பரமபதம் = இறையடி என்றும் சொல்லலாம்

136. கடை வழி = இறுதிப் பயணம் எனலாம்

137. அந்தப்புறம் = தனியறை என்றும் சொல்லலாம்

138. அசரீரி = விண்ணொலி

139. சாகாமல் = சாவாமல்

140. நூற்கள் = நூல்கள்

141. உயர் இரத்த அழுத்தம் = அதிக இரத்த அழுத்தம்

142. கழிப்பறை = கழிவறை

143. ஆத்திச்சூடி = ஆத்தி சூடி

144. மென்மேலும் = மேன்மேலும்

145. பழநி = பழனி (முன்பு பொதினி)

146. சுவற்றில் = சுவரில்

147. கயிறை = கயிற்றை

148. சீயக்காய் = சிகைக்காய்

149. வென்னீர் = வெந்நீர்

150. ஒருகால் (ஒரு வேளை) = ஒருக்கால்

151. சிகப்பு = சிவப்பு

152. கோர்வை = கோவை

153. ஓட்டுனர், நடத்துனர் = ஓட்டுநர், நடத்துநர்

154. இன்றி = அன்றி

155. கோவிலன் = கோவலன் (நாடகக்-காவிய வழக்கம்)

156. கர்னகி = கண்ணகி

157. கண்றாவி கண்+ அராவி = கண்ராவி

158. அண்ணாக்கு = அண்ணம்

159. அம்மணம் = அந்த + மணம்

160. இன்றுமுதல் அமைச்சர் பேசி = இன்று முதல் அமைச்சர் பேசி

161. அத்துடன் = அதனுடன்

162. அவைகள் = அவை

163. பெற்றோர்கள் = பெற்றோர்

164. சுவற்றில் = சுவரில்

165. அருகாமை = அருகில்

166. நாற்றம் (துர்நாற்றம்) = நாற்றம் (நறுமணம்)

167. போக்குவர​த்து = போக்குவரவு

168. ஒன்றாம் தேதி = முதல்​ தேதி

169. எட்டுப் பேர் = எண்மர்

170. நான்கே முக்கால் = நாலே முக்கால்

171. தோற்கடித்து = தோல்வியுறச் செய்து

172. முற்றிலும் = முற்றும்

173. தொடக்கி = தொடங்கி

174. பகுதி மேக​மூட்டமாக = ஓரளவு மேகமூட்டமாக

175. நீரழிவு = நீரிழிவு

176. குடை மிளாகய் = குட மிளகாய்

177. மருதாணி = மருதோன்றி

178. க​ட்டிடம் = கட்டடம்

179. தொப்புள் = கொப்பூழ்

180. முகர்ந்து = மோந்து

181. மறுவீடு = மருவீடு

182. புடவை = புடைவை

183. பல்லாங்குழி = பன்னாங்கு​ழி

184. ​ரூபாய் = உரூபா

185. வாய்வு = வளி, வாயு

186. வண்ணான் = வண்ணன்

187. தட்டிச் செல்பவர் = வெல்பவர்

188. உயிரை இழக்கும் வாய்பபு = உயிரை இழக்கும் அபாயம்

189. தொடக்கி = தொடங்கி

190. மாவு = மா

191. மருந்து எடுத்தேன் = மருந்து உட்கொண்டேன்

192. ஒருத்தன் = ஒருவன்

193. ஒருவள் = ஒருத்தி

194. அத்தகைய = அவ்வகை, அவ்வாறு

195. செல்வந்தர் = செல்வர்

196. நீர்வீழ்ச்சி = அருவி

197. அமுல் = அமல்

198. அதைப் பற்றியது = அது பற்றி, அதைப் பற்றி

199. ​தொற்றியது, முற்றியது = தொற்றிற்று, முற்றிற்று

200. ​கோர்வை = கோவை

201. கோர்த்து = கோத்து

202. கெட்டி மேளம் = கொட்டு மேளம்

203. பெருவாரியாக = பெருவராக

204. பதினைந்தாயிரம் = பதினையாயிரம்

205. பேருந்து எடுத்தல் = பேருந்து ஏறுதல்

206. சதை = தசை

207. ஏமாந்தான் = ஏமாறினான்

208. முயற்சித்தல் = முயலுதல்

209. அருகாமை = அருகில்

210. பதட்டம் = பதற்றம்

211. ஒத்துக்கொள் = ஒப்புக்கொள்

212. குற்றச்சாட்ட = குற்றச்சாற்று

213. ​தூசி = தூசு

214. உடுத்தி வந்தாள் = உடுத்து வந்தாள்

215. திருநிறைச் செல்வி = திருநிறை செல்வி

216. தொட்டாச் சிணுங்கி = தொட்டாற்ச் சுருங்கி

217. கற்பூரம் = கர்ப்பூரம்

218. அச்சுக் கோர்ப்பு = அச்சுக் கோப்பு

219. முற்றிலும் = முற்றும்

220. கடன் வழங்கினான் = கடன் கொடுத்தான்

221. தண்டனை வழங்கினான் = தண்டித்தான்

222. ஆவாரம்பூ = ஆவிரம்பு

223. கைமாறு = கைம்மாறு

224. போக்கிரி = போக்கிறி

225. ​தென்னங்கன்று = தென்னம்பிள்ளை

226. வேப்பம் பிள்ளை = வேப்பங்கன்று

227. சீயக்காய் = சிகைக்காய்

228. புட்டு = பிட்டு

229. நெல் குத்தல் = நெல் குற்றல்

230. பயிறு = பயறு

231. அகண்ட = அகன்ற

232. இணைப் பேராசிரியர் = இணை பேராசிரியர்

233. அயிர மீன் = அயிரை மீன்

234. கட்டெறும்பு (சிவப்பு எறும்பு) = கொட்டெறும்பு (கொட்டும் எறும்பு)

235. சதவிகிதம் = விழுக்காடு

236. நாவு = நா

237. நட்சத்திரம் (வழக்குச் சொல்) = நாண்மீன், விண்மீன்

238. சோதிடம் = கோள் கணியம்

239. நட்சத்திரம் = விண்மீன், நாள்மீன்

240. கிரகம் = கோள், கோள் மீன்

241. பிரபஞ்சம் = அண்டம், பேரண்டம்

242. ஆகாயம் = வெளி, விண்

243. மேகம் = முகில், மஞ்சு, கார், கொண்​மூ

244. புவனம், புமி, தரணி உலகம், = ஞாலம், பிவி, நிலம், பார்

245. ​​​ஜூவாலை = நெருப்பு, அனல், தணல், கனல்

246. சிரம், சிரசு = தலை

247. கரம், புஜம் = கை

248. நயனம் = கண்

249. இரத்தம் = குருதி, செந்நீர்

250. பாதம் = கால், அடி

251. கண்டம் = கழுத்து

252. அதரம் = உதடு இதழ்

253. கேசம் = மயிர்

254. வதனம் = முகம்

255. நாசி = மூக்கு

256. வாக்கியம் = சொற்றொடர்

257. வார்த்தை = சொல்

258. அர்த்தம் = பொருள்